Friday, February 20, 2009
காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதல்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று வழக்குரைஞர்களை ஓட ஓட விரட்டி காவல்துறையினர் தாக்கினர். இந்நிகழ்வை மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சேதுராமன் , ஜோதிமணி ஆகியோர் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் . செய்தியாளர்கள் என்று அடையாள அட்டையை காண்பித்த பிறகும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த செய்தியாளர்கள் இருவரும் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர் .
காவல் துறையினரின் இந்த வெறித்தாக்குதலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மக்கள் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு கருவிகள் அடித்து நொறுக்கப்பட்டன . ஒளிப்பதிவாளர்கள் மீதும் கண்முடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது . மேலும் காவல்துறையினரின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்குரைஞர்களும் படுகாயம் அடைந்தனர் .
Posted by மக்கள் குழாம் at 3:02 AM 3 comments
Posted by மக்கள் குழாம் at 1:43 AM 0 comments
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment